தாய்லாந்து நாட்டின் மதகுரு நடராஜர் கோவிலில் தரிசனம்!
சிதம்பரம்: தாய்லாந்து மன்னர் ராஜகுரு பிதி ஸ்ரீ விஷூதகன், சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். தாய்லாந்து நாட்டில் மன்னர் பதவி ஏற்பின்போது, திருவெண்பாவை பாடி, பதவி ஏற்றுக் கொள்வது மரபாக இருந்து வருகிறது. திருவெண்பாவை மாணிக்கவாசகர் சொல்ல, நடராஜப் பெருமான் எழுதிய ஸ்தலமான சிதம்பரத்திற்கு, தாய்லாந்து நாட்டு மன்னரின் ராஜகுருவும், மதகுருவுமான பிதி ஸ்ரீ விஜூதகன் நேற்று வருகை தந்தார். தொடர்ந்து, நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். மதகுரு விஜூதகனுக்கு நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் செயலர் சர்வேஸ்வர தீட்சிதர், வெங்கடேச தீட்சிதர் இருவரும் பூர்ணகும்ப மரியாதை அளித்தனர். மதகுரு கனகசபையில் இருந்து சி வகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு நடந்த சிறப்பு பூஜையில் சுவாமி தரிசனம் செய்தார். கோவிந்தராஜப் பெருமாள், ஆதிமூலநாதர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்தார். திருப்பாவை, திருவெண்பாவையை தாய்லாந்து மொழியில் மொழி பெயர்ப்பு செய்த நுாலை, ÷ காவில் செயலர் சர்வேஸ்வர தீட்சிதரிடம் மதகுரு அளித்தார். சேக்கிழார் மண்டபத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனம், துலாவூர் ஆதீனம் உட்பட பலர் பங்கேற்றனர்.