வைகுண்டவாச பெருமாள் கோவிலில் அன்னதானம் துவக்கம்
விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில், அன்னதான சிறப்பு திட்டத்தை சேர்மன் பாஸ்கரன் துவக்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டத்தில், ஏழு கோவில்களில் அன்னதான சிறப்பு திட்டம், நேற்று துவங்கப்பட்டது. விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவில், கண்டமங்கலம் படேசாகிப், தும்பூர் நாகாத்தம்மன், திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர், சின்னசேலம் திரவுபதியம்மன், வடக்கனந்தல் உமாமகேஸ்வரன், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் ஆகிய கோவில்களில், நேற்று முதல் அன்னதானம் வழங்கும் திட்டம், துவங்கியது.விழுப்புரம் பெருமாள் கோவிலில் நடந்த அன்னதான திட்டத்தை, நகர்மன்ற சேர்மன் பாஸ்கரன் துவக்கி வைத்தார். அறநிலைய துறை இணை ஆணையர் வாசுநாதன், உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் முத்துலட்சுமி, பட்டாச்சாரியார் வாசுதேவன், கவுன்சிலர்கள் வக்கீல் செந்தில், தங்கசேகர், ராமச்சந்திரன், செந்தில்குமார், சுமதி பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.