உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) வாகனம் வாங்கலாம்!

துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) வாகனம் வாங்கலாம்!

துணிச்சலுடன் செயல்படும் துலாம் ராசி அன்பர்களே!

இந்த மாதம் அக். 4வரை புதனும்,செப். 29க்கு பின் சுக்கிரனும் நன்மை தருவார்கள். குரு, கேது,செவ்வாய் மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். இதனால் கூடுதல் பலனை பெற்று மகிழ்ச்சி அடையலாம். செயல்கள் வெற்றி அடையும். பொருளாதார வளம் அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதியர் இடையே ஒற்றுமை ஏற்படும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். பெண்கள்  உதவிகரமாக இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள். செப். 29க்கு பிறகு பண வரவு இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் முதலீட்டை அதிகரிப்பீர்கள். லாபம் கூடும். அக். 4க்கு பிறகு போட்டியாளர்களின் தொல்லை இருக்கும்.  

பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். இருப்பினும், வாங்குகிற சம்பளம் சூரியனால் விரயம் ஆகலாம். இடமாற்றம் வரவாய்ப்பு உண்டு. அக். 4க்கு பிறகு அதிக சிரத்தை எடுத்தால் கோரிக்கை நிறைவேறும். வேலைப்பளு உயரும். ஆனாலும் அதற்கேற்ற வருமானம் கிடைக்கும்.  

கலைஞர்கள் மாதத் தொடக்கத்தில் சிரத்தை எடுத்தால் தான் ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ் பாராட்டு கிடைக்க சற்று தாமதம் ஆகலாம். பணவிஷயத்தில் எந்த குறையும் இருக்காது.

அரசியல்வாதிகள் கவுரவத்தோடு காணப்படுவர். விரும்பிய பதவி கிடைக்கும்.

மாணவர்களுக்கு குரு பக்கபலமாக இருப்பதால் முன்னேற்றம் காணலாம். இந்த காலத்தை வீணாக்காமல் படியுங்கள்.

விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறை இருக்காது. நெல், சோளம், பழ வகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம்.

பெண்களுக்கு பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். புத்தாடை, நகை வாங்கலாம். விருந்து விழா என சென்று வருவீர்கள். செப். 29க்கு பிறகு பணவரவு அதிகமாகும். உடல்நலம் சீராக இருக்கும்.

நல்ல நாள்:  செப். 18, 21, 22, 30  அக். 1, 6, 7, 8, 9, 10, 14, 15.

கவன நாள்: அக். 2, 3  சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 1,9                       நிறம்: மஞ்சள், சிவப்பு

பரிகாரம்: ஞாயிற்று கிழமை ஏழைகளுக்கு தானம் செய்யலாம். விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவியுங்கள். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !