உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) முயற்சியில் வெற்றி!

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) முயற்சியில் வெற்றி!

விண்ணளவு சாதிக்கத் துடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

இந்த மாதம் முழுவதும் ராகு, சூரியன், புதன் கிரகங்களும், சுக்கிரன் அக். 29 வரையும் நற்பலனை கொடுப்பார்கள். பொருளாதார வளத்திற்கு எந்த குறையும் இருக்காது.உங்கள் முயற்சிகள் வெற்றி அடையலாம். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். உடல் உபாதைகள் பூரண குணம் அடையும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் பொருள் சேரும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அரசின் சலுகை மற்றும் வங்கி கடன் எளிதாக கிடைக்கும். செப். 19,20, அக். 16,17ல் எதிர்பாராத வகையில் பணம் வரலாம்.

பணியாளர்கள் சிறப்பான பலனை அடைவர்.  மேல் அதிகாரிகளின் ஆதரவால் கோரிக்கைகள் நிறைவேறும். அக்டோபர் 9,10ல் பல நன்மைகள் கிடைக்க பெறலாம். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ், பாராட்டு கிடைப்பது அரிது. எதிரிகள் தொல்லையும், அதிக போட்டியும் இருக்கும். அவப்பெயர் உருவாகலாம்.

அரசியல்வாதிகள் நல்ல நிலையில் இருப்பர். பணப்புழக்கத்திற்கு குறை இருக்காது.

மாணவர்களுக்கு புதன் சாதகமாக காணப்படுவதால் போட்டிகளில் வெற்றி காணலாம். ஆசிரியர்களின் ஆலோசனையால் அதிக மதிப்பெண் கிடைக்க வழியுண்டு. சக நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை.

விவசாயிகளுக்கு காய்கறி, பழ வகை பயிர்கள் நல்ல மகசூல் தரும். கால்நடைகள் மூலம் சிறப்பான பலன் கிடைக்கும். புது சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப்போகும். வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும்.

பெண்களின் தேவைகள் பூர்த்தியாகும். கணவர், குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். புத்தாடை, நகை வாங்குவீர்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பயணத்தின் போது கவனம் தேவை.

நல்ல நாள்: செப். 19, 20, 23, 24, 25, அக்.  2, 3, 9, 10, 11, 12, 13, 16, 17

கவன நாள்: அக். 4, 5 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 1,7                            நிறம்: ரோஸ், பச்சை

பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு  நல்வாழ்வுக்கு துணை நிற்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !