உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) முயற்சிக்கு பலன்!

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) முயற்சிக்கு பலன்!

குன்று மேலிட்ட விளக்கான கும்ப ராசி அன்பர்களே!

இந்த மாதம் புதன் அக். 4க்கு பிறகு கன்னிக்கு வந்து நன்மை தருவார். குரு மாதம் முழுவதும் நன்மைகளை தருவார். மற்ற கிரகங்கள் சாதகமான நிலையில் இல்லை. எந்த ஒரு காரியத்தையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதுஇருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்காமல் போகாது. குரு பகவான் குடும்பத்தில்  மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை தருவார். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள்  பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே இருந்து வந்த பிரச்னை மறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கு ஏற்ற பலன் தற்போது குறைவாக இருந்தாலும் எதிர்காலத்தில்  வருமானம் படிப்படியாக அதிகரிக்கும்.

பணியாளர்களுக்கு குருவால் பணி உயர்வும், உழைப்புக்கு அங்கீகாரமும் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். அக். 4க்கு பிறகு மேல் அதிகாரிகளின் ஆதரவு தேடி வரும். நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த கோரிக்கைகள் நிறைவேறும். செப். 19,20 அக். 16,17 சிறப்பான நாட்களாக இருக்கும்.

கலைஞர்களுக்கு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். செப். 29க்கு பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர்.

மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிட்டும்.

விவசாயிகளுக்கு நெல், கோதுமை, சோளம், கரும்பு எள் பயிர்களில் நல்ல மகசூல் உண்டு.

பெண்கள் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். புத்தாடை, நகை வாங்குவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். உடல்நலம் நன்றாக இருக்கும்.

நல்ல நாள்: செப்.19, 20, 21, 22, 26, 27, 30, அக். 1, 9, 10, 16, 17.

கவன நாள்: அக். 11, 12, 13 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 1,3                         நிறம்: மஞ்சள், பச்சை

பரிகாரம்: துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ராகு காலத்தில் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !