ஆறு கை விநாயகர்!
ADDED :3758 days ago
விநாயகருக்கு ஐந்து கரங்கள் தான் உண்டு. ஆனால், நேபாளத்தில் ஆறு கைகளுடன் கூடிய விநாயகர் சிலைகள் உள்ளன. இங்கு புத்தமதத்தினர் விநாயகர் வழிபாடு செய்கிறார்கள். காட்மாண்டு நகரில் உள்ள விநாயகருக்கு நாகம் குடை பிடித்திருக்கிறது. விநாயகரின் முன்பு இரண்டு மூஞ்சுறு வாகனங்களை அமைத்துள்ளனர். புத்தர் தன் சீடரான ஆனந்தருக்கு கணபதி ஹிருதயம் எனப்படும் மந்திரத்தை அருளினார். நேபாள மக்கள் இந்த மந்திரத்தை கூறியே செயல்களை தொடங்குவர்.