உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை பிரம்மோற்சவம்: ஐந்தாம் நாளில் .. மோகினி அவதாரம்!

திருமலை பிரம்மோற்சவம்: ஐந்தாம் நாளில் .. மோகினி அவதாரம்!

திருப்பதி: காணக்கண்கோடி தேவைப்பட்ட மோகினி அவதாரம். திருமலையில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவில் ஐந்தாம் நாளான நேற்று உற்சவரான மலையப்பசுவாமி மோகினி அவதாரத்தில் காலையிலும் கருட வாகனத்தில் இரவும் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருமலை சீனிவாசப்பெருமாள் தனக்கு பிடித்தமான கருட வாகனத்தில் வலம்வந்ததாலும்,மூலவர் திருமேனியை அலங்கரிக்கும் பச்சை மரகதக்கல் உள்ளீட்ட பல கோடி மதிப்பிலான வைர வைடூரிய ஆபரணங்கள் அணிந்துவந்ததாலும், மூலவரே தங்களுக்கு தரிசனம் தர வருவதாக கருதி பக்தர்கள் மாடவீதிகளில் பெருமளவில் திரண்டிருந்தனர். முன்னதாகவே காலையில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர்மாலைகளை அணிந்து கிளியை கையிலேந்தியபடி மோகினி அவதாரத்தில் தந்த பல்லக்கில் மாடவீதிகளில் மலையப்பசுவாமி வலம்வந்தார். அவருக்கு முன்னதாக ஏாராளமான பண்டிதர்கள் வேத கோஷமிட்டபடி சென்றனர்,தொடர்ந்து மோகினி வேடத்தில் அசுரர்களை ஏமாற்றி இந்திரர்களுக்கு அமிர்தத்தை கொடுக்கும் காட்சியை மாணவி ஒருவர் அருமையாக நடித்துக்காட்டினார். -எல்.முருகராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !