வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி உற்சவம்!
ADDED :3781 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக் கிழமை உற்சவம் நடந்தது. விக்கிரவாண்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 5:00 மணிக்கு சுப்ரபாதம் இசையுடன் துவங்கியது. காலை 8:00 மணிக்கு மூலவர் வரதராஜபெருமாள் உடனுறை ஸ்ரீதேவி, பூதேவி அம்பாளுக்கும், உற்சவருக்கும் வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பூஜைகளை ராமனுஜ தேசிக தாசன் செய்திருந்தார். விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர். உபயதாரர்கள் சந்தானம், ரமேஷ், சீனுவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.