தென்திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி வாரி கோவிலில் தேர்த்திருவிழா!
ADDED :3664 days ago
மேட்டுப்பாளையம்: தென்திருப்பதியில் உள்ள வேங்கடேஸ்வர சுவாமி வாரி கோவிலில், நேற்று தேர்த்திருவிழா சிறப்பாக நடந்தது. மேட்டுப்பாளையம் அடுத்த ஆலாங்கொம்பு அருகே தென்திருமலை தென்திருப்பதி, ஸ்ரீவேங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் உள்ளது. வருடாந்திர பிரமோற்சவம் விழா கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் சேஷ வாகனம், அன்னபட்ஷி, சிம்மம், முத்துப்பந்தல், கல்ப விருட்சம், கருட சேவை, அனுமந்த, சூர்ய, சந்திர பிரபை ஆகிய வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வந்தார். நேற்று காலை, பூ அலங்காரம் செய்த தேருக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். நாதஸ்வர இசை, மேள தாளம், எக்காளம், தாரை, தப்பட்டை முழங்க மாட வீதியில் திருவீதி உலா வந்த மலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.