உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி கிராம மக்கள் சிறப்பு வழிபாடு!

மழை வேண்டி கிராம மக்கள் சிறப்பு வழிபாடு!

திருவெண்ணெய்நல்லுார்: மழை வேண்டி, கிராம மக்கள், சிறப்பு பூஜைகள் செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார், டி.புது ப்பாளையம் கிராம மக்கள், மழை வேண்டி, ராகுகாலத்தில் எல்லை தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். ஏரியிலுள்ள துர்க்கையம்மனுக்கு  அபிஷேகம் செய்து, பொங்கலிட்டு, பம்பை உடுக்கையுடன் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின், 11 விதவைகளுக்கு வஸ்திரதானம் செய்தனர்.  அவர்கள் மழைவேண்டி அம்மனிடம் மண்டியிட்டு ஒப்பாரி வைத்து அழுதனர். தொடர்ந்து, ஏரிக்கரையிலுள்ள பிடாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள்  செய்தனர். ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் நடராஜன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள்  செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !