உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டன்விளை ஆலய திருவிழா 25-ல் தொடக்கம்

கண்டன்விளை ஆலய திருவிழா 25-ல் தொடக்கம்

நாகர்கோவில் : கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலய திருவிழா 25-ம் தேதி மாலை 6.30-க்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து வரும் நாட்களில் தினமும் சிறப்பு திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆராதனை, நற்கருணை ஆசிர், நற்கருணை ஆராதனை பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. அக்., மூன்றாம் தேதி ஒன்பதாம் நாள் விழாவில் இரவு ஒன்பது மணிக்கு தேர்பவனி நடக்கிறது. பத்தாம் நாள் விழாவில் காலை எட்டு மணிக்கு ஆயர் ஜெரோம் தாஸ் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. காலை 11 மணிக்கு தேர்பவனியும், மாலை 6.30 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !