ராஜநாராயண பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்!
ADDED :3665 days ago
உளுந்தூர்பேட்டை: எலவனாசூர்கோட்டை ஸ்ரீராஜநாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. எலவனாசூர்கோட்டை ஸ்ரீராஜநாராயண பெருமாள் கோவில், புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை, ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீராஜநாராயண பெருமாள், பிரகாரங்களுக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது. பின்னர் திருமஞ்சனம் நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார். ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவர் ராமதாஸ், உறுப்பினர்கள் ராஜேந்திரன், பாண்டுரங்கன், செல்வம், கோவிந்தசாமி, சிவக்குமார், மணவாளன் ஆகியோர் செய்திருந்தனர்.