உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவலூர்பேட்டையில் கஞ்சி கலய ஊர்வலம்!

அவலூர்பேட்டையில் கஞ்சி கலய ஊர்வலம்!

அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில், கஞ்சி கலய விழா நடந்தது. அவலூர்பேட்டையில் மேல்மருவத்துõர்  ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கஞ்சி கலய விழா நடந்தது. ஆன்மிக இயக்க மாவட்ட செயலாளர் பரத்குமார், மாவட்ட பிரசார குழு இணை  செயலாளர் விஜயலட்சுமி பரத்குமார் முன்னிலை வகித்தனர். மன்ற தலைவர் முத்து கிருஷ்ணன் வரவேற்றார். ஊராட்சி தலைவர் கலாராஜ÷ வலாயுதம், கஞ்சி கலய ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அண்ணாமலை, அன்னதானத்தை  துவக்கி வைத்தார். முன்னதாக  சக்தி கொடி ஏற்றுதலும், சிறப்பு அர்ச்சனை வழிபாடும், கருவறை அம்மனுக்கு பாலாபிஷேகமும் நடந்தது.  மாணவர்களுக்கு நோட், பேனா பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் சரவணன், அண்ணாமலை, வெண்ணிலா, வசந்தி, ம÷ கஸ்வரி, ராணி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !