உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்!

மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்!

கோவை: பாரதியார் பல்கலையின் இளங்கலை, முதுகலை படிப்பு தனித் தேர்வர்கள் அடுத்த மாதம் நடக்கவுள்ள செய்முறை தேர்வுக்கு, அபராதத்துடன் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலையில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு தனித் தேர்வர்களுக்கு நவ., மாதம் பருவத் தேர்வு நடைபெற உள்ளன. இம்மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள், அக்., மாதம் இரண்டு மற்றும் மூன்றாவது வாரங்களில் நடைபெறவுள்ளன. இத்தேர்வுக்கு பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய கட்டணத்தை, அபராதம் இல்லாமல் சமர்ப்பிக்க கடந்த, ௨௧ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, நாள் ஒன்றுக்கு, ௧௦ ரூபாய் அபராதத்துடன் சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அனுப்பப்படும் விண்ணப்பம், முழுமையாக பூர்த்திசெய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கல்லுாரி முதல்வரின் கையொப்பம் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், என பல்கலை தெரிவித்துள்ளது. விபரங்களுக்கு, www.bu.ac.in என்ற பல்கலை இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !