உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்ப்பணம் யார் யாருக்கு?

தர்ப்பணம் யார் யாருக்கு?

மகாளய பட்ச நாட்களில் தர்ப்பணம் செய்யும் போது யார் யாருக்கு செய்ய வேண்டும் என்று ஒரு ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ளது. தகப்பனார், அவரது தந்தை (தாத்தா), கொள்ளுத் தாத்தா, தாயார், தாயாரின் தந்தை (தாத்தா), கொள்ளுத் தாத்தா, தாயாரின் தாய் (பாட்டி), கொள்ளுப்பாட்டி, தகப்பனாரின் மூத்த மனைவி, அப்பாவின் சகோதரர்கள், தர்ப்பணம் செய்பவரின் சகோதரர்கள், சகோதரிகள், அவர்களது கணவன்மார், மகன்கள், மகள்கள், மனைவி (இறந்து போயிருந்தால்), தந்தையின் சகோதரிகள் (அத்தைமார்), அவர்களது கணவர்கள், தாயின் சகோதரர்கள் (தாய்மாமனார்கள்), தாயின் சகோதரிகள், அவர்களது கணவர்கள், மனைவியின் தந்தை, தாய் (மாமானார், மாமியார்), மருமகள், மைத்துனர்கள், குரு (உபதேசம் செய்தவர்), ஆசார்யர் (வேதம் கற்பித்தவர்), நாம் பணி செய்யும் இடத்தின் எஜமானர் (இவர் இறந்திருந்தால் பணி கொடுத்து உதவிய நன்றிக்காக செய்வது), நண்பர்கள் (எந்த ஜாதியாக இருந்தாலும்).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !