உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதிக்கு வலுக்கட்டாயமாக வரவழைப்பவர்!

திருப்பதிக்கு வலுக்கட்டாயமாக வரவழைப்பவர்!

கண்ணபரமாத்மாவின் குணநலன் பற்றி ஆண்டாளை விட சிறப்பாக அலசியவர்கள் யாரும் இருக்க முடியாது. அவள் கண்ணனை புகழ்ந்து பாடும்போது, கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என குறிப்பிடுகிறாள். தன்னை வெறுப்பவர்களின் மனதைக்கூட கண்ணன் வென்று விடுபவன், என்பது இதன் பொருள். தனக்கு எதுவுமே தராதவர்களின் வீட்டிற்குள் நுழைந்து, பக்தர்களின் மனதை திருடுவான். இதை குறிக்கவே, கோகுலத்தில் தனக்கு வெண்ணெய் தர மறுத்து, விரட்டிய கோபியர்களின் வீட்டிற்குள் புகுந்து வெண்ணெய் திருடினான்.பக்தர்களை வலுக்கட்டாயமாக தன் வீடான வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்வதற்காகவே, அவன் இத்தகைய லீலைகளை செய்கிறான். அவன் கோவிந்தனாக அவதாரம் செய்த திருப்பதிக்கு நம்மை வலுக்கட்டாயமாக வரவழைத்து, நம்மிடமுள்ள காசு, பணம் மற்றும் தலைமுடியை குறைப்பதன் மூலம் அகங்காரத்தை அகற்றி, நம்மை பக்தி பாதைக்குள் இழுக்கும் பணியைச் செய்கிறான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !