உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எப்படி பேசக் கூடாது?

எப்படி பேசக் கூடாது?

நமக்கு நாக்கு படைக்கப்பட்டிருப்பது சாப்பாட்டை ருசிக்க மட்டுமல்ல. பேச்சில் கவனம் செலுத்தவும் தான்!இதோ பேச்சுக்கான கட்டளைகள்: தேவையிருந்தால் மட்டும் பேசுங்கள்.நன்மை தரும் பேச்சை மட்டும் பேசுங்கள்.மலர்ந்த முகத்துடன் கண்ணியமாக பேசுங்கள்மென்மையான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள்.மற்றவர் கேட்க முடியாத அளவுக்கு தாழ்ந்த குரலில் பேசாதீர்கள்பிறர் பயப்படும்படி உரக்கவும் பேசாதீர்கள்பிறர் மனம் வலிக்கும் படி பேசாதீர்கள்நீதி தவறாமல் பேசுங்கள்தீய பேச்சால் நாக்கை கறைப்படுத்தாதீர்கள் பிறருடைய குறைகள் பற்றி பேசாதீர்கள்உங்கள் நாக்கு கோள் சொல்லக்கூடாது பிறரை கேலி செய்யும் வகையில் பேசாதீர்கள்பொய்யான வாக்குறுதிகளை வீசாதீர்கள் யாருக்கும் பட்டப்பெயர் வைக்காதீர்கள்இந்த கட்டளைகளை மீறுவது மதிப்பைக் குறைக்கும். நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் இறைவனால் நியமிக்கப்பட்ட வானவர் ஒருவர் உடனடியாக பதிந்து கொள்கிறார். நம் இறப்புக்குப் பின் இவர் இன்ன வார்த்தையைப் பேசினார், என்று இறைவனிடம் அவர் சொல்வார். அது நல்ல வார்த்தையாக இருந்தால், நாம் பலனடைவோம். மோசமானதும், தேவையற்றதும், பலனற்றதுமாக இருந்தால், இறைவனின் கோபத்திற்கு ஆளாவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !