சாய்பாபா கோயில் பூமி பூஜை!
ADDED :3649 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஸ்ரீசாய் நகரில் ஷீரடி சாய்பாபா கோயில் பூமி பூஜை நடந்தது. சென்னை திருவான்மியூர் ஷீரடி சாய்பாபா பிரார்த்தனா சமாஜ் நிறுவனர் ஆச்சார்யார்ஜி துவக்கி வைத்தார். கோவிந்தராஜா டெக்ஸ்டைல்ஸ் சேர்மன் வரதராஜன், தேவி வரத
ராஜன் முன்னிலை வகித்தனர்.
கணபதி ஹோமம், ஷீரடியிலிருந்து கொண்டு வரப்பட்ட முழு முதற்கல்லை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. கூட்டுப்பிரார்த்தனை, அன்னதானம் நடந்தது. வைகைச்செல்வன் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், ஊராட்சி ஒன்றிய தலைவர் யோகவாசுதேவன், தொழிலதிபர்கள் மனோகரன், ரத்தினவேல் பக்தர்கள் கலந்து கொண்டனர்.