ஆகமம் என்பதன் பொருள் என்ன?
ADDED :4038 days ago
ஆகதம்,கதம், மதம் என்ற மூன்று சொற்களின் முதல் எழுத்துக்களின் சேர்க்கையே ஆகம என்ற சொல்லாகும். ஆகதம் என்றால் வந்தது என்று பொருள். அதாவது சிவனுடைய முகத்தில் இருந்து உபதேசமாக வந்தது. கதம் என்றால் சென்றடைந்தது என்று பொருள். அதாவது சிவன் உபதேசிக்க, அவரது துணைவி உமாதேவி கேட்டு அவரைச் சென்றடைந்தது. மதம் என்றால் மதித்துப் போற்றப்பட்டது என்று பொருள். உமாதேவி கேட்டதையே, விஷ்ணுவும் உபதேசமாக பெற்று மதித்துப் போற்றினார். இந்த மூன்றையும் இணைத்து, சுவாமிக்கு பூஜை செய்வதற்கான முறைகள் வழிபாட்டுமுறைகள்) உருவாக்கப்பட்டன. இதை ஆகம என்று குறிப்பிட்டு, சொல்லை முடிப்பதற்காக ம் சேர்த்து, ஆகமம் என்றனர்.