காரைக்கால் நவராத்திரி இறுதி தினத்தில் அம்பு ஏய்தும் நிகழ்ச்சி!
ADDED :3635 days ago
காரைக்கால்: காரைக்கால் நித்திய கல்யாண பெருமாள், கைலாசநாதர் கோவிலில் வண்ணி மரத்தின் மீது அம்பு ஏய்தும் நிகழ்ச்சி நடந்தது. இக்கோவில்களில் நவராத்திரி விழா கடந்த 14ம் தேதி துவங்கியது. காரைக்கால் அம்மையார் மணி மண்டபத்தில் நவராத்திரி கொலு அமைத்தனர். தினசரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து விழா நடந்தது. நேற்று முன் தினம் நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் இருந்து பெருமாள் குதிரை வாகனத்திலும், கைலாசநாதர் கோவிலில் இருந்து முருக பெருமான் பார்வதி அம்மனின் அருள் பெற்று வேலுடன் குதிரை வாகனத்தில் வீதியுலா நடந்தது. அம்மையார் குளங்கரையில் அம்பு எய்யும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர் செல்வம், தனி அதிகரி ஆசைதம்பி செய்திருந்தனர்.