உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாயல்குடியில் பூக்குழி இறங்கிய மும்மதத்தினர்!

சாயல்குடியில் பூக்குழி இறங்கிய மும்மதத்தினர்!

சாயல்குடி: சாயல்குடி அருகே, மும்மதத்தினரும், பூக்குழி இறங்கிய மதநல்லிணக்க விழா நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, பெரியகுளத்தில் மாமுநாச்சியார் அம்மன் கோவில் உள்ளது. மொகரம் பண்டிகையையொட்டி, அம்மனுக்கு பூக்குழி விழா நடந்தது. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் கண்மாயில் குளித்துவிட்டு, மும்மதத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட ஆண்கள் பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.பெண்கள் தலையில் பாத்திரத்தில், தீ வைத்து தட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில், சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !