உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு டிசம்பரில் கும்பாபிஷேகம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு டிசம்பரில் கும்பாபிஷேகம்

சென்னை: கபாலீஸ்வரர் கோவிலுக்கு, வரும் டிசம்பர் மாத இறுதியில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், 2004ல் கும்பாபிஷேகம் நடந்தது.  அதையடுத்து தற்போது, 9கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன. மொத்தம், 17 விமானங்கள், 16 கால்மண்டபம், செப்பனிடப்பட்டுள்ளன. பெரிய தேர் மற்றும் நான்கு சிறிய தேர்களில் பழுது நீக்கப் பட்டுள்ளது. கோவில் சுற்றுப்புறங்களில், அதிநவீன  கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. யாகசாலை மண்டபம், நீராழி மண்டபம், மகா மண்டபம்  பழுது நீக்கம், ராஜகோபுரத்திற்கு வண்ணம் பூசுதல், விமான கலசங்களுக்கு தங்க முலாம் பூசுதல் ஆகியவை நடந்து வருகின்றன. பணிகள் முடிந்த  உடன், டிசம்பர் மாத இறுதியில், மகா கும்பாபிஷேகம் நடத்த, அறநிலைய துறை முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !