உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அளவாக சாப்பிடுங்கள்!

அளவாக சாப்பிடுங்கள்!

சிலருக்கு உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போகும். என்னதான் மருந்து சாப்பிட்டாலும் குணமாகாது. உடனே டாக்டர் நோயாளிக்கு உணவுக்கட்டுப்பாடு விதிப்பார். இன்று மட்டுமல்ல. வேத காலத்திலேயே உணவுக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. வேதத்தில், யோ புங்தே அஹமேவ பங்தே என்ற ஸ்லோகம் இருக்கிறது. இதற்கு யார் என்னை அதிகம் சாப்பிடுகிறானோ, அவனை நான் சாப்பிடுகிறேன் என்று பொருள். எதையும் அளவோடு சாப்பிடுங்கள். தினமும் காலையில் ஸ்லோகங்கள், பாடல்கள் ஒன்றிரண்டை உரக்கச் சொல்லுங்கள். உங்களது இஷ்ட தெய்வத்திற்கு நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டை மானசீகமாக நைவேத்யம் செய்துவிட்டு, பிரசாதமாக எண்ணி அளவாக சாப்பிடுங்கள். உங்கள் உடல்நிலையில் முன்னேற்றம் தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !