100 மூடை அரிசி சமையல்!
ADDED :4031 days ago
தஞ்சாவூர் பெரிய கோவிலிலுள்ள கருவறையில் உள்ள சிவலிங்கம் (பிரகதீஸ்வரர்) உலகிலேயே மிகப் பெரியதாகும். ஆறு அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரமும், 23 அரை அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனிக் கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தைச் சுற்றி வர இடமும் கருவறையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. நமது பார்வையில் தென்படுவது சிவலிங்கத்தின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அபிஷேக, ஆராதனைகளுக்கு வசதியாக இருபுறங்களிலும் படிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த லிங்கத்திற்கு 100 மூடை அரிசியை சமைத்து ஆக்கும் சாதம் கொண்டு அன்னாபிஷேகம் நடத்துவார்கள். இங்குள்ள வராகி அம்மனுக்கு, ஆடி மாதத்தில் காய்கறிகளைக் கொண்டு அலங்கரிப்பார்கள். காய்கறி அலங்கார அம்மனுக்கு சாகம்பரி என்று பெயர்.