கோவிலில் தல விருட்சம் இருப்பது ஏன்?
கோவில் என்பது மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று விஷயத்தால் சிறப்பு பெறுகிறது. மூர்த்தி என்பது மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் தெய்வத்தையும், தலம் என்பது தல விருட்சத்தையும் (மரம்), தீர்த்தம் என்பது கோவில் குளத்தையும் குறிக்கும்.தலவிருட்சம் என்பது கோவில் கட்டுவதற்கு முன், இறைவன் எழுந்தருளியிருந்த இடமாகும். அதனால், தெய்வத்துக்கு ஒப்பான சக்தி அதற்குண்டு. கோவில் தோன்றுவதற்கு முன்பே அந்த மரம் இருப்பதால், அதனை தலவிருட்சம் என போற்றுகிறோம். தீர்த்தம் எனப்படும் குளம், நீராடுவோரின் பாவத்தைப் போக்கி புண்ணியம் தருவதாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றிலுமே தெய்வ சக்தி நிரம்பியிருப்பதால் இதுபோன்றகோவில்களில் வழிபட்டால் நிறைவான பலன் கிடைக்கும். குழந்தைப்பேறு இல்லாதவர்கள், தல விருட்சத்தை தினமும் மூன்று முறை வலம் வந்து, கடவுளை வழிபட விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.