உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எவ்வளவு பாட்டு பாடியிருப்பாங்க!

எவ்வளவு பாட்டு பாடியிருப்பாங்க!

சைவத்திருமுறைகள் 12. இதில், திருஞான சம்பந்தர் பாடிய 4147 பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அப்பர் பாடிய 3066 பாடல்கள் 4,5,6ம் திருமுறைகளாகும். சுந்தரர் பாடிய 1026 பாடல்கள் ஏழாம் திருமுறையாகும். மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாம் திருமுறை ஆகும். இவற்றிலுள்ள பாடல்கள் 1056. திருமாளிகைத் தேவர் முதலான 9 அடியார்கள் பாடியதிருவிசைப்பாவும், திருப்பல்லாண்டும் ஒன்பதாம் திருமுறை ஆகும். இதிலுள்ள பாடல்கள் எண்ணிக்கை 301. திருமூலர் பாடிய திருமந்திரம் பத்தாம் திருமறை ஆகும். இதில் 3000 பாடல்கள் உள்ளன. இறையனார் அருளிய திருமுகப்பாசுரம் தொடங்கி நம்பியாண்டார் நம்பி எழுதிய பதிகங்களும், அதை தொடர்ந்து இறுதியாக 12 ஆசிரியர்கள் பாடியவையும் 11ம் திருமுறையாகும். இதில் 1400 பாடல்கள் அடங்கும். சேக்கிழார் எழுதிய பெரிய புராணம் 12ம் திருமுறை ஆகும். இதிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை 4286.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !