உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாவ மன்னிப்பு!

பாவ மன்னிப்பு!

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறும் ஒரு அருமையான செய்தியைக் கேளுங்கள்.தன் குடும்பத்தார், தன்  செல்வம், தன் அண்டைவீட்டார் ஆகியோர் விஷயத்தில் ஒரு மனிதன் செய்யும் தவறுகளுக்கு தொழுகை, தர்மம் ஆகியன பரிகாரம் ஆகின்றன.இதன் கருத்து: மனிதன் தன் மனைவி மக்களுக்காகப் பாவத்தில் வீழ்ந்து விடுகின்றான். இவ்வாறே வாணிபத்திலும், அண்டை வீட்டார் விஷயத்திலும் பரவலாகத் தவறு நேர்ந்து விடுகின்றது. இந்தத்தவறுகளை மேலே குறிப்பிட்ட வணக்கங்களின் விளைவாக அல்லாஹ் மன்னித்து விடுவான். ஆனால், ஒரு நிபந்தனை. (பாவம் தான் எனத்தெரிந்தும் வேண்டுமென்றே செய்திருக்கக்கூடாது). பாவம் தவறுதலாய் நிகழ்ந்து விட்டதாய் இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !