உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதையிலே பழுது வந்தால் தேவனைத் தேடுங்கள்!

பாதையிலே பழுது வந்தால் தேவனைத் தேடுங்கள்!

போதகர் டி.எல்., மூடி, வேதத்தை மிகவும் நேசித்து கைக்கொண்டவர். அவர் வாழ்க்கையெல்லாம் பாக்கியமாயிருந்தது. அவர் தன்னிடமிருந்த வேதப்புத்தகத்தில் எழுதி வைத்துள்ளதைப் படியுங்கள்.இந்த வேத புத்தகம் முழுவதும் கர்த்தருடைய வார்த்தைகள். இதில் மனிதனுடைய நிலைமை, இரட்சிப்பின் வழி, பாவங்களுக்காக பலன் விசுவாசிகளுக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள் அத்தனையும் எழுதப்பட்டிருக்கிறது. இதிலுள்ள வசனங்கள் பரிசுத்தமும், சம்பவங்கள் உண்மையும், கட்டளைகள் நியாயமும், வர்த்தைகள் அதிகாரப்பூர்வமாகவும் இருக்கின்றன. நீங்கள் ஞானமடைய இதை வாசியுங்கள். நீங்கள் பாதுகாக்கப்பட இதை வாசியுங்கள். நீங்கள் பரிசுத்தமடைய இதை அப்பியாசியுங்கள். இந்த வேதம், உங்கள் பாதைக்கு வெளிச்சமும் உங்கள் ஆன்மிக வாழ்விற்கு உணவு, உங்களை உற்சாகப்படுத்தும் மாமருந்தாக இருக்கிறது. தேவனோடுள்ள ஐக்கியம் சீர்படவும், பரலோகத்திற்கு வழிதிறக்கவும், பாதாளத்தின் வாசல்கள் மூடப்படவும், இதில் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. இதில் கிறிஸ்துவே மூலகாரணமாகவும், முன்மாதிரியாகவும், மகிமையானவராகவும் காட்சியளிக்கிறார். வேதத்தை தியானத்தோடு வாசியுங்கள். ஜெபத்தோடு வாசியுங்கள். அடிக்கடி வாசியுங்கள். இது கருத்துச் சுரங்கம். மகிமையான உன்னத தைலம். ஆம்! மனித குலத்துக்கு கிடைத்திருக்கும் மாபெரும் பரிசு வேதாகமமே.நாம் செல்லும் பாதையில் இடையூறு ஏற்பட்டால் தேவனின் வேதாகமத்தை ஒளிவிளக்காகக் கொள்வோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !