இருதயத்தில் ஏன் கலக்கம்?
ADDED :4031 days ago
சர் வால்டர் ஸ்காட் என்பவர் மரணத்தருவாயில் இருக்கும்பொழுது தனது நண்பரை அழைத்து தனது கடைசி ஆசையைக் கூறினார். என்ன அவரது ஆசை? வேதத்தில் இனிமையான, ஆறுதலான ஒரு பகுதியை படித்துக் காட்டு என்றார் அவருடைய நண்பர். யோவான் 14ம் அதிகாரத்தை அவருக்கு வாசித்துக் காண்பித்தார். அவர், நல்லது இவை எவ்வளவு ஆறுதலான வார்த்தைகள்! நீ வாசிக்கும் போது என்னுள்ளத்தில் ஒரு பெரிய இளைப்பாறுதல் உண்டானது என்றார். அதில் ஒரு வசனத்தை நாமும் தினமும் படிப்போமா!உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக: தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள், என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு (யோவா 14:1:2)ஆம்! காலமெல்லாம் பயமின்றி வாழ இந்த வசனம் உதவும்.