உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்!

கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்!

கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கடலுார், பாடலீஸ்வரர் கோவி லில் சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெற்றது. அதனையொட்டி பெரியநாயகி சமேத பாடலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை  நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு அன்ன அபிஷேகம் மற்றும் அன்ன அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பெரியநாயகி  அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. நெல்லிக்குப்பம்: அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு  சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. கைலாசநாதருக்கு அன்னாபிஷேகம் செய்து அன்னத்தால் அலங்கரித்தனர். பூஜை முடிந்ததும் சிவன்  மேல் இருந்த அன்னத்தை எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். அம்மன் சந்தனக்காப்பு அலங்காராத்தில் அருள்பாலித்தார்.

பூலோதநாதர் கோவில் மற்றும் கீழ்பட்டாம்பாக்கம் ஓசூர் அம்மன் கோவிலில் உள்ள காசி விஸ்வநாதர் சுவாமிக்கும் அன்னாபிஷேகம் நடந்தது.  வடலுார்: குறிஞ்சிப்பாடி அடுத்த பொட்டவெளி கைலாசநாதர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு நன்னீராட்டு நடைபெற்றது. அதை தொடர்ந்து  அன்னத்தால் மூலவர் கைலாசநாதருக்கு அபிஷேகம் நடந்தது. நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த நரிமேடு கிராமத்தில் 1400 ஆண்டுகள் பழமைவா ய்ந்த அம்பாள் பிரகன்நாயகி சமேத தென் கங்காபுரீஸ்வரர் கோவிலில் மூலவர் சுவாமிக்கு அன்ன அபிஷேகம் நடந்து, சுவாமி அன்ன அலங்காரத்தில்  அருள்பாலித்தார்.  

பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சரக்கொன்றைநாதர் சுவாமிக்கு நடந்த அன்னாபிஷேகத்தில், மூலவர் வீரட்டானேஸ்வரர்,  அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !