பாசிபட்டினம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!
ADDED :3635 days ago
தொண்டி:தொண்டி அருகே பாசிபட்டினம் சர்தார் நைனாமுகமது ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு திருவிழா கடந்த 18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா நேற்று நடந்தது. அதிகாலை 3 மணிக்கு எஸ்.பி.பட்டினம் மாணவநகரி கிராமத்திலிருந்து அதிகாலை 3 மணிக்கு சந்தணக்கூடு ஊர்வலம் புறபட்டது. ஸ்தானிகன்வயல் வழியாக பாசிபட்டினம் தர்காவை அடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு தர்கா மின்விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது. தினமும் அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கபட்டன.