உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணம் மகாமக விழா: புதிய இணையதளம் துவக்கம்

கும்பகோணம் மகாமக விழா: புதிய இணையதளம் துவக்கம்

சென்னை: கும்பகோணம் மகாமக திருவிழாவையொட்டி, அரசு சார்பில், புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.கும்பகோணம் மகாமக திருவிழா, 2016 பிப்., 22ல் நடைபெற உள்ளது. இதற்கான இணையதளத்தை துவக்குவது என, செப்டம்பரில் தலைமைச் செயலர் தலைமையில் நடந்த, ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது; அதன்படி, www.online.thanjavur.com/mahamagam என்ற இணையதளம் துவங்கப்பட்டு உள்ளது. இதை, கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில், தஞ்சாவூர் கலெக்டர் சுப்பையன் துவக்கி வைத்தார். இணையதளத்தில், கும்பகோணத்தில் உள்ள தங்குமிடம், கோவில்களின் தல வரலாறு, தமிழக அரசு செய்துள்ள முன்னேற்பாடுகள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !