ஆறு பிறை நிலவு!
ADDED :4025 days ago
புறநானூற்றுப் பாடல்களில், பல்வேறு மன்னர்களின் வீரம், முருகனின் வீரத்துடன் ஒப்பிட்டே புகழப்பட்டுள்ளது. முருகனை கருவறையில் மூலவராகக் கொண்ட கோயில்கள். ஸ்வயம் பிரதான கோயில்கள் எனப்படும். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பரிபாடல் ஆறுமுகனை அதிக அளவில் போற்றும் நூல்களுள் குறிப்பிடத்தக்கது. ஈசன், ஒரு பிறைச்சந்திரனைத்தான் அணிந்துள்ளார். ஆனால் ஆறுமுகன் தனது ஆறுமுகங்களிலும் திருநீறணிந்துள்ள அழகு ஆறு பிறைநிலவுகளை தரித்திருப்பது போல் காட்சியளிக்கிறது என்று கந்தர் கலிவெண்பாவில் பாடியுள்ளார் குமரகுருபரர்.