வேடசந்தூரில் சொர்ண ஆகார்ஷண பைரவர் பூஜை
ADDED :3963 days ago
வேடசந்தூர்: வேடசந்தூரில் உள்ள பெருமாள் கோயிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சொர்ண ஆகார்ஷண பைரவர் பூஜை நடந்தது. சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் மற்றும் ஆறு கால சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சாமிக்கு, தீபாராதனை நடந்தது. கோயில் அர்ச்சகர் அம்பி சுப்பிரமணியம் சிறப்பு பூஜைகளை செய்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.