ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை
ADDED :3963 days ago
ஊட்டி: ஊட்டி எம்.பாலாடா கீழ் அப்புக்கோடு ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை நடந்தது.இந்த நிகழ்ச்சியில், சித்தி செல்வவிநாயகர், ஆனந்தமலை முருகன், நவகிரகங்கள், ஏழு ஹெத்தையம்மன்களுக்கு அபிஷேக அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களின் இன்னிசை, ஆனந்த சித்தரின் அருளுரை, ஆன்மிக சொற்பொழிவுகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.