உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரங்கநாதபெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

ரங்கநாதபெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

பொள்ளாச்சி: ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதபெருமாள் கோவிலில், தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. ஆனைமலை, பெரியகடைவீதியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதபெருமாள் கோவில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி மற்றும் வளர்பிறை ஏகாதசி, சனிக்கிழமை ஆகிய நாட்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. இம்மாத தேய்பிறை அஷ்டமி பூஜை நேற்றுமுன்தினம் நடந்தது. ஒன்பது வகை அபிேஷமும், ஒன்பது வகை மலர்களும் பூஜையில் வைக்கப்பட்டன. இதில்,100க்கும் மேற்பட்ட ஆண்,பெண்கள் பங்கேற்றனர். பூஜையில், தொழில் தடையின்றி நடைபெற நெய்தீபம், பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !