உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆன்மிக வாழ்க்கையில் மவுனத்தின் பங்கு என்ன?

ஆன்மிக வாழ்க்கையில் மவுனத்தின் பங்கு என்ன?

ஒருவரிடம் ஆன்மிகச் சிந்தனைகள் சீராக மலர்ந்து வருகிறது. என்பதற்கு, மவுனம் நல்ல ஓர் அடையாளம் எனவேதான். ஆன்மிக வாழ்க்கையின்  முதல்படியே மவுனம்தான். வீண் பேச்சுகள் எல்லாவற்றையும் விட்டொழித்து கடவுளை நினை என்று மகான்கள் உபதேசிக்கிறார்கள். வெற்று  ஆரவாரப் பேச்சுக்களிலேயே பெரும்பாலானவர்களின் பொழுது வீணாக்கப்படுகிறது. வளவள என்று வீண் பேச்சில் ஈடுபடுவது, ஆன்மிக  சாதனையைப் பெரிய அளவில் கட்டாயம் பாதிக்கும். ஆதலால் பிறரிடம் பேசும்போது - அவர் எவராயினும் தெரிந்து, தெளிந்து, பயனுடைய  சொற்களையே பேச வேண்டும். பேச்சு குறையக் குறைய எண்ண அலைகள் ஓய்ந்து மனம் இறைவனிடம் ஒடுங்கும். எனவே எந்த அளவுக்கு  மவுனத்தைக் கடைப்பிடித்து கடவுள் சிந்தனையில் ஆழ்ந்து ஈடுபடுகிறோமோ, அந்த அளவுக்கு ஆன்மநலன் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !