உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் சேதுக்கரையில் எழில் கொஞ்சும் கடற்கரை!

ராமநாதபுரம் சேதுக்கரையில் எழில் கொஞ்சும் கடற்கரை!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சேதுக்கரை அருகே இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை அமைந்துள்ளது. இங்கிருந்து மன்னார் வளைகுடா தீவுகளையும் ரசிக்கலாம். சேதுக்கரையில் பிரசித்தி பெற்ற சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வடமாநில பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். அப்பகுதியில் கொட்டக்குடி ஆறு கலக்கும் முகத்துவாரம் உள்ளது. இது ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து 1.5 கி.மீ., ல் அமைந்துள்ளது. இப்பகுதியில் மரங்கள் சூழ்ந்து எழில் கொஞ்சும் கடற்கரை இயற்கையாக அமைந்துள்ளது. படகுகள் விடுவதற்கும் சறுக்கு விளையாட்டுகளை நடத்தவும் இடவசதி உள்ளது. ஆங்காங்கே மணல் திட்டுகளும், திட்டு வளைவுகளும் காண்போரை மெய்மறக்க செய்கிறது. அருகிலேயே ஏராளமான தென்னை மரங்களும், சதுப்புநிலக்காடுகளும் காணப்படுகின்றன. இங்கிருந்து மன்னார் வளைகுடா தீவுகளின் அழகுகளையும் ரசிக்க முடியும். தற்போது இப்பகுதிக்கு செல்வதற்கான பாதையில் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் அப்பகுதிக்கு யாரும் செல்ல முடிவதில்லை. இக்கடற்கரையை சீரமைத்தால் அழகான சுற்றுலா பகுதியாக மாறும். இதன்மூலம் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரித்து அப்பகுதி வளர்ச்சி அடையும். மேலும் பழங்காலத்தில் இப்பகுதியில் துறைமுகம் இருந்திருக்கலாம் என, தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !