உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோனியம்மன் கோவிலில் சமத்துவ தீபாவளி

கோவை கோனியம்மன் கோவிலில் சமத்துவ தீபாவளி

கோவை : இ.ம.க., தமிழகம் சார்பில், கோவையில் அனைத்து சமூகத்தவர்களுடன் இணைந்து சமத்துவ தீபாவளி, பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து, இந்து மக்கள் கட்சி( தமிழகம்) சார்பில், சமத்துவ தீபாவளி ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. நேற்று கோனியம்மன் கோவில் வளாகத்தில் சமத்துவ தீபாவளி கொண்டாடப்பட்டது. தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை வகித்தார். கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை தலைவர் இளங்கோ, தாழ்த்தப்பட்டோர் மக்கள் இயக்கத்தை சேர்ந்த, தேவராஜன், அம்பேத்கர் தேசிய பேரவை தலைவர் முருகேசன், வனவாசி மக்கள் இயக்கத்தலைவர் பழனிச்சாமி பங்கேற்றனர். தாழ்த்தப்பட்ட, மலை வாழ் மக்களுக்கு, ஸ்ரீ கல்கி மாணவ சேவா சமிதி சார்பில் புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !