நெல்லிக்குப்பத்தில் அமாவாசை நோன்பு: பெண்கள் வழிபாடு!
ADDED :3660 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் பெண்கள் அமாவாசை நோன்பு எடுத்து வழிபட்டனர். இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியன்றும் அதனுடன் வரும் அமாவாசையன்றும் பெண்கள் விரதமிருந்து நோன்பு எடுப்பது வழக்கம். நேற்று அமாவாசையை முன்னிட்டு நெல்லிக்குப்பத்தில் பெண்கள் புது மண் சட்டி வாங்கி அதில் அதிரசம், தேங்காய், வாழைப்பழம் போன்ற பூஜை பொருட்களுடன் விரதமிருந்து கடைவீதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் மற்றும் கீழ்பட்டாம்பாக்கம் ஓசூரம்மன் கோவில் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களுக்குச் சென்று சுவாமியை வழிபட்டனர்.