உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யப்பனைக் காண நெய் கொண்டு செல்வது ஏன்?

அய்யப்பனைக் காண நெய் கொண்டு செல்வது ஏன்?

சபரிமலை அய்யப்பனுக்கு காணிக்கையாக கொடுக்க பக்தர்கள் நெய்கொண்டு செல்லும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது தெரியுமா? அய்யப்பனின் வளர்ப்புத் தந்தையான பந்தள மகாராஜா, ஆண்டுக்கு ஒரு முறை மணிகண்டனை, காண மலையேறும் போது அவருக்கு பிடித்த பலகாரங்களை கொண்டு சென்றார். சபரிமலை உச்சிக்கு கால்நடையாக செல்ல பலநாட்கள் ஆகும் என்பதால், எளிதில் கெட்டுப்போகாத நெய்யில் அவற்றை செய்து எடுத்துச் சென்றார். அத்துடன் தேங்காய்க்குள் தனியாகவும் நெய்யை ஊற்றி கொண்டு சென்றார். இதனால் தான், இன்றும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் தேங்காய்க்குள் நெய்யை ஊற்றி எடுத்துச் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !