18 படியிலும் உறையும் 18 தெய்வங்கள்!
ADDED :3747 days ago
சபரிமலை அய்யப்பன் கோயில்
பதினெட்டு படிகளிலும் 18 திருநாமங்களுடன் அய்யப்பன் எழுந்தருளியுள்ளார்
அந்த பெயர்கள். குளத்தூர் பாலன், ஆரியங்காவு ஆனந்தரூபன், எருமேலி ஏழைப்
பங்காளன், ஐந்து மலைத்தவன், ஐங்கார சகோதரன், கலியுக வரதன், கருணாகரத்
தேவன், சத்திரிய பரிபாலகர், சற்குண சீலன், சபரிமலைவாசன், வீரமணி கண்டன்,
விண்ணவர் தேவன், விஷ்ணு மோகினி பாலன், சாந்த சொரூபன், சற்குணநாதன், நற்குண
ஜாலந்தன், உள்ளத்தமர்வான், ஐயப்பன். அத்துடன், இந்த 18 படிகளில் விநாயகர்,
சிவன், பார்வதி, முருகன், பிரம்மா, விஷ்ணு, ரங்கநாதர், காளி, எமன்,
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு , சுக்ரன், சனி, ராகு கேது ஆகிய
18 தெய்வங்கள் வாசம் செய்வதாகவும் கூறுகிறார்கள்.