பெரியாண்டிக்குழி கோவிலில் சத்துரு சம்ஹார யாகம்!
ADDED :3625 days ago
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் சத்துரு சம்ஹார யாகம் நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் புத்திர சந்தானம், கண் திருஷ்டி, ஏவல், பில்லி சூனியம், விவசாயம் தழைக்கவும் வேண்டி ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1ம் தேதி சத்துரு சம்ஹார யாகம் நடப்பது வழக்கம். இந்தாண்டு யாகம் கடந்த 16ம் தேதி துவங்கியது. அதனையொட்டி அன்று மாலை 5:00 அனுக்ஞை, விக்ஜேஸ்வர பூஜையும், இரவு 8:00 மணிக்கு சத்துரு சம்ஹார ஆறுமுக அர்ச்சனையும் நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு விநாயகர் பூஜை நடந்தது. பகல் 12:00 மணிக்கு சகஸ்கர நாம அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. யாகத்தில் சுற்றுப் பகுதிளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நிர்வாகிகள், பொதுமக்கள் செய்தனர்.