பாடலீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்!
ADDED :3655 days ago
கடலூர்: கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது. கார்த்திகை மாதத்தில் சி வனை வழிபடுவது உகந்த மாதமாகும். குறிப்பாக, சோமவாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவனுக்கு பூஜை செய்வது விசேஷம். கார்த்திகை மாதம் முதல் திங்கள் கிழமையான நேற்று, காலை கடலூர் பாடலீஸ்வரர் கோவில் சங்கு மண்டபத்தில் கலசங்கள், 108 சங்குகள் வைத்து பூஜை நடந் தது. மூலமந்திரம், வேத மந்திரங்கள் முழங்க ஹோமம் நடந்தது. பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. புனித நீர் அடங்கிய கலசங்கள் கோவிலை வலம் வந்து சுவாமிக்கு கலச அபிஷேகம் நடந்தது. பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன் தங்க கவசத்தில் அரு ள்பாலித்தனர். பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.