உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தார்கோட்டை அம்மன் கோயிலில் குங்கும அர்ச்சனை

சித்தார்கோட்டை அம்மன் கோயிலில் குங்கும அர்ச்சனை

சித்தார்கோட்டை: சித்தார்கோட்டை அருகே அத்தியூத்து உதிரமுடைய அய்யனார், பகவதி அம்மன் கோயிலில் கார்த்திகை மாத சிறப்பு லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை நடந்தது. மூலவருக்கு 18 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குங்கும அர்ச்சனையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று சக்தி ஸ்தோத்திரம், உலக நன்மைக்கான பூஜைகள் செய்தனர். அழகன்குளம் அழகிய நாயகி மகளிர் மன்ற தலைவி பிரேமா ரெத்தினம் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் தர்மராஜ், நாகேந்திரன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !