உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வலம்புரி வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!

வலம்புரி வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!

புதுச்சேரி: லாஸ்பேட்டை சாந்தி நகர்,  வலம்புரி வெற்றி விநாயகர் கோவில், கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கோவில்  கும்பாபிஷேக விழா கடந்த  23ம் தேதி துவங்கியது. 24ம்  தேதி மகாலட்சுமி ஹோமம், கோபூஜை  நடந்தது. 25ம் தேதி முதல் கால யாக  பூஜை துவங்கியது.26ம் தேதி காலை 8.00  மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, மாலை 6.00 மணிக்கு மூன்றாம்  காலயாக பூஜை நடந்தது. நேற்று காலை 7.00 மணிக்கு நான்காம் கால யாக  பூஜையும்,  9.30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடும், சரியாக 10.00 மணியளவில், வெற்றி  விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப் ரமணியர், செல்வ முத்துமாரியம்மன்  கோவில், கோபுர கலசத்திற்கு, புனித ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மயிலம் ஆதினம் சிவஞான  பாலய சுவாமிகள் நடத்தி வைத்தார். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., நந்தா சரவணன், சிவக்கொழுந்து, பா.ஜ., சுவாமிநாதன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !