உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி ஐயப்பனுக்கு திரவிய அபிஷேக ஆராதனை

கள்ளக்குறிச்சி ஐயப்பனுக்கு திரவிய அபிஷேக ஆராதனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் ஐயப்பனுக்கு விசேஷ திரவிய அபிஷேக ஆராதனைகள் நாளை நடக்கிறது. கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள ஐயப்பனுக்கு நாளை (2ம் தேதி) விசேஷ திரவிய அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. காலை 6:00 மணிக்கு மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனையும், 10:30 மணிக்கு விசேஷ திரவியங்களைக் கொண்டு மகா அபிஷேக, ஆராதனைகளும் நடக்கிறது. மதியம் 1:00 மணிக்கு தீபாராதனையும், மாலை 5:00 மணிக்கு சாமி கொலுவிருத்தலும், மகா தீபாராதனையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !