உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை சேவை-பாதுகாப்பில் 250 வயர்லெஸ் செட்டுகள்

சபரிமலை சேவை-பாதுகாப்பில் 250 வயர்லெஸ் செட்டுகள்

சபரிமலை: சபரிமலை வரும் பக்தர்களுக்கு சேவை செய்வதற்காகவும், பாதுகாப்புக்காகவும் 250 வயர்லெஸ் செட்டுகள் பயன்படுத்தப்படுகிறது. சபரிமலையில் போலீசின் சேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 18-ம் படியில் பக்தர்களை ஏற்றுவது, கூட்டத்தை ஒழுங்கு படுத்துவது, நோய்வாய் பட்டவர்களை ஆஸ்பத்திரியில் சேர்ப்பது, கூட்டம் பிரிந்தவர்கள் பற்றிய தகவல்களை பப்ளிசிட்டிக்கு கொடுத்து ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியிட செய்வது, இவற்றுக்கு மேலாக கோயில் மற்றும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது என்று இவர்களது சேவை நீள்கிறது. இதற்கு தகவல் தொடர்பு முக்கியமாக தேவைப்படுகிறது. எனவே 400 வயர்லெஸ் செட்டுகள் இயங்கும் வகையிலான கருவிகள் இங்கு பொருத்தப்பட்டுள்ளது. தற்போது 250 வயர்லெஸ் செட்டுகள் பயன்பாட்டில் உள்ளது. எஸ்.ஐ. ரேங்க் வரை உள்ளவர்களுக்கு ஒவ்வொரு பாயின்டிலும் செட் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமான பாயின்டுகளில் அதிகாரிகள் இல்லாத பட்சத்தில் போலீசுக்கும் இது வழங்கப்பட்டுள்ளது. இதில் பேசுபவர்கள் சுவாமி சரணம் என்று சொல்லிதான் தகவல்களை கொடுக்கின்றனர். இதற்காக சன்னிதானத்தில் இரண்டு இடத்தில் கட்டுப்பாடு அறைகள உள்ளது. இன்ஸ்பெக்டர் வேணுகோபால் தலைமையில் எஸ்.ஐ. ரேங்கில் உள்ள 30 டெக்னிஷியன்கள் தகவல் தொடர்பை ஒருங்கிணைக்கின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !