பைரவர் என்ற சொல்லுக்கு பொருள்!
ADDED :3801 days ago
பைரவர் என்ற சொல்லுக்குஅச்சுறுத்தும் போர்க்குரல் உடையவர் என்று பொருள். சிவபெருமான் அசுரர்களையும், தனக்கு அடங்க மறுத்தஅரசர்களையும் எதிர்த்து போரிடும் போது ஏற்ற வடிவமே பைரவக் கோலம். இவர் ஆயுதங்களை எடுக்கவேண்டும் என்ற அவசியமே இல்லை. சத்தம் போட்டாலே போதும்! எதிரிகள் அடங்கிப் போவார்கள். இவரை வைரவர்என்று கிராமப்புறங்களில் சொல்வர். நவரத்தினங்களில் வைரத்தின்ஒளி பிரமிப்பு தருவதாக இருக்கும். அதுபோல், பக்தர்கள் மனதில் அஞ்ஞானத்தை அழித்து ஞானம் என்னும் ஒளியேற்றுபவர் என்பதால், இப்பெயர்ஏற்பட்டது.