உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழப்பாளையம் கோவில்களில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்!

கீழப்பாளையம் கோவில்களில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்!

உளுந்தூர்பேட்டை: கீழப்பாளையம் கிராமத்தில் வரசித்தி விநாயகர், மகாமாரியம்மன், திரவுபதி அம்மன் கோவில்களில் மகா கும்பாபிஷேகம்  நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா, எலவனாசூர்கோட்டை அடுத்த கீழப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர், மகாமாரிய ம்மன், திரவுபதி அம்மன் கோவில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.  விழாவையொட்டி கடந்த 27ம் தேதி கணபதி ஹோமம், முதற்கால பூஜை,  2ம் கால பூஜையும் நடந்தது.  28ம் தேதி மூன்றாம் கால பூஜை நடந்தது. தொடர்ந்து 29ம் தேதி அதிகாலை 108 பசுக்களை கொண்டு கோ பூஜை நடந் தது. காலை 8:30 மணிக்கு வரசித்தி விநாயகர், மகாமாரியம்மன், திரவுபதியம்மன் ஆகிய கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு,  மகா கும்பாபிஷேகம் நடந்தது. அ.தி.மு.க.,ஒன்றிய கவுன்சிலர் முன்னிராஜ்குமார், தே.மு.தி.க., தொண்டரணி மாவட்ட துணை செயலாளர் திருமால்  உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

எம்.குன்னத்தூர்: உளுந்தூர்பேட்டை தாலுகா எம்.குன்னத்தூர் கிராமத்தில் ஸ்ரீவிநாயகர், வள்ளிதெய்வானை சமேத சுப்ரமணியர், மாரியம்மன்,  ஸ்ரீதேவிபூதேவி சமேத ஸ்ரீனிவாசபெருமாள், ஐயப்பன், கெங்கையம்மன், ஆதிபராசக்தி கோவில் ஆகிய 7 கோவில்களில் மகா கும்பாபிஷேகம்  நடந்தது. அதனையொட்டி 29ம் தேதி காலை 8:00 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !